Custom Search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

பன்றிக் காய்ச்சல்

பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். இந்நோய் இன்புலியன்சா A, இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது. இந்நோயை பரப்பும் தீ நுண்மம் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள்


பன்றிக் காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு ஆர்த்தோமிக்சோவிரிடே குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் பரவுகிறது
இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் இத்தீநுண்மம் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது.மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் இருந்து இந்த நோய் ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளது. வட அமெரிக்கா முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு மெக்சிகோ நாட்டில் முதலில் பன்றி காய்ச்சல் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் 1,614 பேர் அவதிப்பட்டு வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்கு மெக்சிகோவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு சுமார் 149 பேர் பலியாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் 20 பேரும், கனடாவில் 6 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கு உரிய நோய் பரவல் பிரேசில், இசுரேல், ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருப்பதாக கருதப்படுகிறது. 74 நாடுகளில் இந்நோயினால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவிலும் இந்நோய் பரவி வருகிறது. இதுவரை (11 ஆகஸ்ட்,2009) நாடு முழுவதும் 959 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மகாராட்டிர மாநிலம், புணே நகரம் பன்றிக் காய்ச்சலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் தாணே மாவட்டம், தமிழ்நாடு, தில்லி, கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகியவற்றிலும் பன்றிக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

My Gallery