Custom Search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

காய்ச்சலின் அறிகுறிகள்

பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள்
உடல் சூடாதல் - சுரம் (100.o F க்கு மேல்), தலைவலி, தசைவலி,உடல் பலவீனம், தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்

எந்தத் தருணத்தில் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்?
பின்வரும் சிக்கல்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்: சிறுவர்/குழந்தைகளுக்கு:
வேகமான மூச்சு விடுதல், மூச்சு விடுதலில் சிரமம்
நீலம் அல்லது பழுப்பு நிறத்தோல்
தேவையான அளவு நீர் உட்கொள்ளாமை
நிற்காத, கடும் வாந்தி
தூங்கிக்கொண்டே இருத்தல், கலந்துரையாட விருப்பமின்மை


பன்றிக் காய்ச்சலைக் கண்டறிய உதவும் ஆய்வுகள்
மருந்து
பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு டமி ·ப்ளூ மற்றும் ரிலின்ஸா என்ற மருந்துகள் அளிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் பரவி 48 மணி நேரத்திற்குள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.
பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்களல் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த மருந்து ஒருவருக்கு 5 முதல் 7 நாட்கள் வரை கொடுக்கலாம்.
டமி ஃப்ளு மாத்திரைகள் ஒரு வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கலாம்.
ரிலின்ஸா என்ற மாத்திரையை 7 வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம். இதனை தடுப்பு மருந்தாக 5 வயது ஆனவர்கள் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம்.
இந்த மருந்துகள் அனைத்தும் மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும். இந்த காய்ச்சலிருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு ஊசி இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல நாட்டு மருந்து நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இதற்காக அவை பாதிக்கப்பட்டவர்களின் இரத்தங்களை கேட்டுள்ளனர். அதிலிருக்கும் தீ நுண்மத்தை ஆராய்ந்து விரைவில் மருந்து தயாரிக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

பன்றிக் காய்ச்சல் தொற்றுபரவுதல்
2007 பிலிப்பைன்சில் தொற்றுபரவுதல்
1976 அமெரிக்காவில் தொற்றுபரவுதல்
2009 பன்றிக் காய்ச்சல் தொற்றுபரவுதல்

நோய் தடுப்பு முறை
நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது நுகர்மூடி அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்ளது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

கொள்ளை நோய்
ஜீன் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது


வரலாறு
பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகைத் தீநுண்மம், 1918இல் பரவிய, ஏறக்குறைய 50 மில்லியன் மனித உயிர்கள் இறப்பதற்குக் காரணமாயிருந்த, எசுப்பானிய ஃப்ளூ என்றழைக்கப்படும் உலகம்-தொற்றிய 1918 ஃப்ளூ கொள்ளை நோயின் பரம்பரையில் வரும் ஒரு வகைத் தீநுண்மமே ஆகும் ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய எச்1என்1 தீநுண்மம் ஆகும். இது இன்ஃப்ளுயென்சா ஏ வகைத் தீநுண்மத்தின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுறுக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்
ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) என்னும் பெயர் கிரேக்க மூன்று மொழிச்சொற்களால் ஆனது. orthos = சரியான, சீரான ('standard, correct'), myxo = சளி ('mucus'), viridae தீநுண்மங்கள்
http://www.vetscite.org/publish/articles/000041/print.html
http://www.nature.com/news/2009/090427/full/news.2009.408.html
http://www.who.int/mediacentre/news/statements/2009/h1n1_20090427/en/index.html
http://www.nature.com/news/2009/090427/full/news.2009.405.html
http://www.nature.com/news/2009/090427/full/news.2009.405.html
"பன்றிக் காய்ச்சல்: மேலும் மூவர் பலி- சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்வு". தினமணி (11 Aug 2009). பார்க்கப்பட்ட நாள் 11 August 2009.
Centers for Disease Control and Prevention > Key Facts about Swine Influenza (Swine Flu) Retrieved on April 27, 2009
http://apps.uwhealth.org/health/hie/1/007421.htm
http://www.cdc.gov/swineflu/key_facts.htm
http://apps.uwhealth.org/health/hie/1/007421.htm
http://thatstamil.oneindia.in/news/2009/04/28/world-flu-spreads-along-north-america-149-dead.html
http://www.nature.com/news/2009/090427/full/news.2009.405.html
http://www.hindu.com/2009/08/11/stories/whoh1n1.pdf
http://www.who.int/mediacentre/news/statements/2009/h1n1_pandemic_phase6_20090611/en/index.html
http://www. cdc. gov/ncidod/eid/vol12no01/05-0979.htm 1918 இன்ஃப்ளுயென்சா: உலகம்-தொற்று கொள்ளை நோய்களின் தாய்
http://www. cdc. gov/ncidod/eid/vol12no01/05-0979.htm 1918 இன்ஃப்ளுயென்சா: உலகம்-தொற்று கொள்ளை நோய்களின் தாய்
http://en.wikipedia.org/wiki/2009_flu_pandemic#cite_ref-NYT6-23_86-0 ஆங்கில விக்கிப்பீடியா

My Gallery