Custom Search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை: உலக சுகாதார நிறுவனம்

பன்றி காய்ச்சல் சிகிச்சை குறித்து உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது :

பன்றி காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காவிட்டால், ஜானமிவிர் மருந்தை கொடுக்கலாம்.

இந்த மருந்துகள் மரணத்தை ஏற்படுத்தும் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.

பன்றி காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்பட்டுவதும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

My Gallery